Type Here to Get Search Results !

பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி திமுக சட்டத்துறை சார்பில் (WARROOM) திறப்பு விழா.


பாப்பிரெட்டிப்பட்டி – மார்ச் 26:


தருமபுரி மேற்கு மாவட்ட திமுக சட்டத்துறை சார்பில், 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கும் வகையில் ‘வார்ரூம்’ (War Room) திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட செயலாளர் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சந்திரசேகரன் முன்னிலையில், தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பி. பழனியப்பன் தலைமையில் வார்ரூம் திறந்து வைக்கப்பட்டது.


இந்த வார்ரூம் மூலம் தேர்தல் தொடர்பான சட்ட ரீதியான நடவடிக்கைகள், புகார்கள், கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் வேட்பாளர் வழக்கறிஞர் கதிரவன், திமுக வழக்கறிஞர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies