தருமபுரி – மார்ச் 26:
தருமபுரி அருகே தொழில் மையத்தில் செயல்பட்டு வரும் நியூ ஹரிசான் மேல்நிலைப்பள்ளியில், மை பாரத் மற்றும் கக்கன் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. “ஏக்பேட் மாக்கி நனம்” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பள்ளி வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் சிலம்பரசன் தலைமை தாங்கினார். மாணவர்களிடம் மரங்கள் நடும் முக்கியத்துவம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கக்கன் இளைஞர் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த பாவல்ராஜ், கமலக்கண்ணன், கபில் தேவ், வெங்கடேஷ், செந்தில்நாதன், ராமு, அச்சுநாதன், ஞானவேல், விக்னேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)