பாப்பிரெட்டிப்பட்டி, மார்ச் 30:
தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளரும், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான பி. பழனியப்பன், திமுக தலைமை கழகம் அறிவித்ததையடுத்து பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு வருகை தந்தார். அவரது வருகையையொட்டி, தருமபுரியில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பட்டாசுகள் வெடித்து, மேளதாளங்கள் முழங்க, பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர்கள் பிரபு ராஜசேகர், சக்திவேல், நகர செயலாளர் நாட்டான்மாது, இளைஞரணி உறுப்பினர்கள் சிவகுரு, அசோக் குமார் கோவிந்தன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ரேணுகாதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், தேமுதிக, விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களும் திரளாக பங்கேற்று வரவேற்பு அளித்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

