மகாவீர் ஜெயந்தி நாளை முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 31.03.2026 அன்று கொண்டாடப்படும் மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் செயல்படும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மூடப்படுகின்றன.
அதேபோல், FL-2, FL-3, FL-3A / FL-4A உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்களின் மதுக்கூடங்கள் மற்றும் முன்னாள் படைவீரர் மதுவிற்பனை கூடங்களும் மூடப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 30.03.2026 இரவு 10.00 மணி முதல் 01.04.2026 காலை 12.00 மணி வரை அனைத்து மதுபான விற்பனைகளும் நிறுத்தப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறி எவரேனும் மதுவிற்பனை செய்தாலோ அல்லது கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
.gif)

