Type Here to Get Search Results !

மான் வேட்டையாடி காரிமங்கலத்தில் கறி விற்பனை செய்த 2 பேரை கைது செய்த வனத்துறை அதிகாரிகள்.


காரிமங்கலம், மார்ச். 08:


தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் மான் வேட்டையாடி அதன் கறியை விற்பனை செய்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு இருவரை கைது செய்தனர்.


காரிமங்கலம் சந்தைகடை பகுதியில் மான் கறி விற்பனை செய்யப்படுவதாக பாலக்கோடு வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனக்காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்காணிப்பு மேற்கொண்டனர்.


அப்போது இரண்டு வாலிபர்கள் மாமிச பொட்டலங்களுடன் இருப்பது கண்டறியப்பட்டதால் அவர்களை பிடித்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள வெள்ளிமலை கிராமத்தை சேர்ந்த அஜித் (25) மற்றும் தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் (22) என்பதும் தெரியவந்தது.


இருவரும் அரூர் அருகே உள்ள வெள்ளிமலை காப்புக் காட்டில் மானை வேட்டையாடி அதை அறுத்து கறியாக பொட்டலமாக கட்டி காரிமங்கலம் பகுதியில் விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டனர்.


இதையடுத்து இருவரையும் வனத்துறையினர் கைது செய்து, மான் கறி மற்றும் அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை தருமபுரி சிறையில் அடைத்தனர்.


#தகடூர்குரல் #ThagadurKural #தருமபுரி #Dharmapuri #Karimangalam #ForestDepartment #WildlifeCrime #DeerPoaching #TamilNews #LocalNews

© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

📲 சமீபத்திய செய்திகள் உடனுக்குடன் அறிய எங்களை பின்தொடருங்கள்

Facebook: https://www.facebook.com/Thagadurkural⁠�

X: https://x.com/thagadurkural⁠�

WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029VaoBeTI1CYoYYJHGr72R⁠�

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies