தருமபுரி - மார்ச் 08:
தருமபுரி அரசு கலைக் கல்லூரி கலையரங்கில் ஆண்டு விழா நடை பெற்றது. இவ்விழாவில் 2025-2026 கல்வியாண்டில் 22 இளநிலை துறைகளைச் சார்ந்த 1,602 மாணவ, மாணவியரும், 13 முதுநிலை துறைகளைச் சார்ந்த 328 மாணவ, மாணவியரும் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் தருமபுரி அரசு கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் கோ.கண்ணன் தலைமை உரையாற்றினார். கல்லூரி ஆண்டு அறிக்கையினை நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர். விஜயா தாமோதரன் வாசித்தார். மேலும் மு.முருகேஷ் எழுத்தாளர், முதுநிலை ஆசிரியர் - இந்து தமிழ் திசை " வாசிப்பே வசந்தம் " என்ற தலைப்பில் மாணவருக்கு சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியின் இறுதியாக மாணவ, மாணவிகளின் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகள், பொய்க்கால் குதிரை ஆட்டம், மயிலாட்டம், பறை இசை மற்றும் தாரை தப்பட்டை இசை நிகழ்ச்சியினை வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியர் முனைவர் ஆ. முருகதாஸ் ஒருங்கிணைப்பில் விழா சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், கௌரவ விரிவுரையாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
.gif)

