கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த ஊரகத் திறனாய்வு தேர்வை எழுத அனுமதிக்கப்படுகிறார்கள். தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற தகுதியான மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான ஊரகத் திறனாய்வு தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி நடைபெற்றது. அண்மையில் வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் கல்வி உதவித்தொகைக்கு தகுதியான மாணவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில் தருமபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியத்தில் உள்ள இராமாகொண்டஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் தரணி ஸ்ரீ மற்றும் அக்ஷயா ஆகிய இரண்டு மாணவிகள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
ஊரகத் திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், நல்லாசிரியர் சுப்பிரமணி மற்றும் ஆசிரியர்கள் சால்வை அணிவித்து பாராட்டினர். மேலும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் மாணவிகளை வாழ்த்தி பாராட்டினர்.
#தகடூர்குரல் #ThagadurKural #தருமபுரி #Dharmapuri #EducationNews #RuralTalentExam #GovernmentSchool #StudentAchievement #TamilNews
.gif)

.jpg)