காரிமங்கலம் | பிப்ரவரி 09:
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் கிழக்கு ஒன்றியம், பைசுஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கெங்குசெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர், அக்கட்சிகளில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்தனர்.
இதில் பூவன், திருவெங்கடம், சுப்பிரமணி ஆகியோரின் ஏற்பாட்டில், சுமார் 20-க்கும் மேற்பட்டோர், கெரகோடஅள்ளியில் நடைபெற்ற நிகழ்வில், அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன், தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். புதியதாக இணைந்தவர்களுக்கு அதிமுக துண்டினை அணிவித்து, மாவட்ட செயலாளர் வரவேற்றார்.
இந்த நிகழ்வில், அதிமுக காரிமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், முன்னாள் கவுன்சிலர் ஜெயபிரகாஷ், முன்னாள் பைசுஅள்ளி ஊராட்சி தலைவர் வேலன், முன்னாள் துணை தலைவர் சிங்காரவேலன், சேலம் ஐடி விங் மண்டல துணை தலைவர் சாந்தகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)