தருமபுரி – ஏப்ரல். 13:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில் நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு, திமுக வேட்பாளர் டி.என்.வி. செந்தில்குமாருக்கு ஆதரவாக பாலக்கோடு பேரூராட்சியில் தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. பாலக்கோடு நகர செயலாளர் மற்றும் பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி தலைமையில், போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் இணைந்து உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கேட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
பாலக்கோடு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தின் போது, பொதுமக்கள், கல்லூரி மாணவிகள், நடைபாதை வியாபாரிகள் மற்றும் பேருந்து பயணிகளிடம் திமுக தேர்தல் அறிக்கை மற்றும் வாக்குறுதி சீட்டுகள் வழங்கப்பட்டன. மேலும், திமுக ஆட்சியின் சாதனைகள் மற்றும் புதிய தேர்தல் வாக்குறுதிகள் குறித்து எடுத்துரைத்து, வரவிருக்கும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வேட்பாளர் செந்தில்குமாரை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டனர்.
இந்த நிகழ்வில் தொழிற்சங்க உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு உற்சாகமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)