Type Here to Get Search Results !

தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் “சமத்துவ நாள்” உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஏற்கப்பட்டது.


தருமபுரி – ஏப்ரல் 13:


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், “சமத்துவ நாள்” முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு, சமூக சமத்துவம், மனிதநேயம் மற்றும் சகோதரத்துவத்தை பேணும் வகையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.


உறுதிமொழியில், சாதி வேறுபாடுகளை ஒழித்து, அனைவருக்கும் சம உரிமை வழங்க வேண்டும், சமுதாயத்தில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை நிலைநிறுத்த வேண்டும், பாகுபாடு இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கருத்துகள் வலியுறுத்தப்பட்டன. மேலும், மனிதர்களிடையே சமத்துவம் நிலவ வேண்டும், சமூக நீதி உறுதி செய்யப்பட வேண்டும், எந்தவொரு பாகுபாடுகளும் இல்லாத சமூக அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதையும் உறுதிமொழியாக எடுத்துக்கொண்டனர்.


இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு. மு. கவிதா, கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) திரு. வெஷின், அவ்வலக மேலாளர் திரு. கேசவமூர்த்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு. வெ. லோகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies