நல்லம்பள்ளி, ஏப்ரல். 15:
தருமபுரி மாவட்டத்தில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, தருமபுரியில் உள்ள இலளிகம் தியாகி ஆர்.பி. நினைவு படிப்பக முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில், அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜே. பிரதாபன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் எ. அலமேலு தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் ஜெ. காளியம்மாள் முன்னிலை வகித்தார். மேலும், மாவட்ட துணைச் செயலாளர் ஜி. மாதையன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பி. இரவி, என்.பி. ராஜி, ஜி. ராஜகோபால், கே. லட்சுமணன், எம். குமார், ஜி. சம்பத் மற்றும் கோவிந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வில் சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் முக்கியத்துவம் குறித்து கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
.gif)

.jpg)