தருமபுரி | பிப்ரவரி 09:
தமிழ்நாடு அரசின் “என் ஊர் என் கனவு திட்டம்” (இலக்கு 2030 – உத்திகள் மற்றும் செயல் திட்டங்கள்) தொடர்பான மாவட்ட அளவிலான கலந்தாய்வுக்கூட்டம் வருகின்ற 10.02.2026 (செவ்வாய்க்கிழமை) காலை 10.00 மணியளவில், தருமபுரி புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – அதியன் கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:
“என் ஊர் என் கனவு திட்டம்” என்பது தமிழ்நாடு அரசால் முன்னெடுக்கப்படும் முக்கியமான தொலைநோக்கு திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மூலம் தருமபுரி மாவட்டத்தில் சிறந்த கட்டமைப்பு, தொழில் வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒருங்கிணைந்த வளர்ச்சி எட்டப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக, தருமபுரி மாவட்ட தொலைநோக்கு 2030 திட்டம் உருவாக்கப்படவுள்ளது.
இந்தக் கலந்தாய்வுக்கூட்டத்தில்
மாவட்ட தொழில் மையம்
வேளாண் மற்றும் உழவர் நலத்துறை
பட்டு வளர்ச்சித்துறை
கால்நடை, மீன்வளம், கூட்டுறவு துறை
உணவு பாதுகாப்புத்துறை
சமூக நலத்துறை, மகளிர் திட்டம்
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை
சுற்றுலா, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை
தொழிலாளர் நலன், பள்ளிக் கல்வி, உயர்கல்வித் துறை
உள்ளிட்ட அனைத்து துறைகளைச் சார்ந்த சங்க பிரதிநிதிகள், உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், வணிகர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு சாரா அமைப்புகள், துறைசார் வல்லுநர்கள், தொழிலதிபர்கள் மற்றும் சமூக அக்கறை கொண்ட பொதுமக்கள் கலந்து கொண்டு, மாவட்ட வளர்ச்சி தொடர்பான தங்களது கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைக்கலாம்.
அனைத்து சமர்ப்பிப்புகளிலும் பங்களிப்பாளரின் பெயர் மற்றும் தொடர்பு விவரங்கள் குறிப்பிடப்பட வேண்டும். இந்த முக்கியமான கலந்தாய்வுக்கூட்டத்தில் அனைத்து தரப்பு பங்குதாரர்களும் கலந்து கொண்டு, தருமபுரி மாவட்டத்தின் எதிர்கால வளர்ச்சிக்கான திட்ட வடிவமைப்பில் பங்களிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
.gif)

.jpg)