Type Here to Get Search Results !

காரிமங்கலத்தில் பெண்களுக்கான சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 17ம் தேதி நடைபெறவுள்ளது.


தருமபுரி | பிப்ரவரி 12:


தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் பெண்களுக்கான சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில், Tata Electronics (Hosur) நிறுவனம் கலந்து கொண்டு பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளது.


இந்த வேலைவாய்ப்பு முகாம், காரிமங்கலம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், 17.02.2026 (செவ்வாய்க்கிழமை) காலை 10.00 மணிக்கு நடைபெறுகிறது.


கல்வித்தகுதி:

  • 12-ஆம் வகுப்பு

  • ITI

  • Diploma

  • கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு


18 வயது நிரம்பிய பெண் வேலைநாடுநர்கள் மட்டும் இம்முகாமில் கலந்து கொண்டு தேர்வில் பங்கேற்கலாம்.


ஊதியம் மற்றும் வசதிகள்:

  • மாதச் சம்பளம்: ரூ.13,500 முதல் ரூ.16,000 வரை

  • உணவு – இலவசம்

  • தங்குமிடம் – இலவசம்

  • போக்குவரத்து வசதி – இலவசம்


வேலைநாடுநர்கள்,

  • அசல் மற்றும் நகல் கல்விச்சான்றிதழ்கள்

  • ஆதார் அட்டை

  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம்


உடன் கொண்டு வர வேண்டும். இம்முகாம் முழுக்க முழுக்க இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேற்படி பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ள பெண் வேலைநாடுநர்கள் 17.02.2026 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies