பாலக்கோடு, ஜூன் 25:
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு பாலக்கோட்டில் சிறப்பு ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமிற்கு பாலக்கோடு தொகுதி பொறுப்பாளர் குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாதப்பன் மற்றும் நகர செயலாளர் விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தருமபுரி மாவட்ட கழகச் செயலாளர் சிவன் குத்துவிளக்கேற்றி ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். தமிழக வெற்றிக் கழகம் மற்றும் தமிழ்நாடு பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இணைந்து நடத்திய இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்து, முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். ரத்ததானம் செய்தவர்களுக்கு பழங்கள், பிரெட், ஊட்டச்சத்து பானங்கள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் வீரமணி, மூர்த்தி, மணி, தங்கராஜ், பச்சையப்பன், சக்திவேல், சிவா, சங்கர், ரஞ்சித், சஞ்சீவன், மகளிரணி நிர்வாகிகள் ஜோதி, இந்திரா, ஈஸ்வரி, கோவிந்தம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் நகர, ஒன்றிய மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
.gif)

.jpg)