தருமபுரி | பிப்ரவரி 11:
தருமபுரி நான்கு ரோடு சந்திப்பில், சாலை விதிகளை பின்பற்றி தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை பாராட்டும் விதமாக, காவல்துறை மற்றும் ஹெக் பவுண்டேஷன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியது.
இந்த நிகழ்ச்சியில், தலைக்கவசம் அணிந்த வாகன ஓட்டிகளுக்கு தர்பூசணி பழம் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நிகழ்வில் தருமபுரி போக்குவரத்து உதவி ஆய்வாளர் மணிகண்டன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து அறிவுரை வழங்கினார்.
மேலும் சமூக ஆர்வலர்களான விஜயகுமார், சிவா, அருள் பாண்டியன், ஹரி பிரசாத், லட்சுமி நாராயணன் மற்றும் சமூக விழிப்புணர்வாளர் வழக்கறிஞர் சுபாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சாலை விதிகளை கடைப்பிடித்து தலைக்கவசம் அணிவது உயிர் பாதுகாப்பிற்கான மிக முக்கியமான பழக்கமாகும் எனவும், பொதுமக்கள் தொடர்ந்து இதனை பின்பற்ற வேண்டும் எனவும் அதிகாரிகள் வலியுறுத்தினர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)