தருமபுரி | பிப்ரவரி 12:
தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தை, மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (12.02.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கடைகள், உணவகங்கள், பொருட்கள் வைப்பதற்கான பாதுகாப்பு அறை, கழிவறைகள், நேரக் காப்பாளர் அறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை, பேருந்து நிறுத்தும் இடங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, மின் விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
பேருந்து நிலையத்தை சுத்தமாகவும் தூய்மையாகவும் பராமரிக்க அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், பயணிகள் பேருந்துக்காக காத்திருக்க கூடுதலாக நிழற்கூடம் அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
பயணிகள் பாதுகாப்பாக பயணம் செய்யும் வகையில் அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும், புதிய பேருந்து நிலையத்திலிருந்து நகர பேருந்து நிலையத்துக்கு செல்ல பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, நகர் நல அலுவலர் இலட்ஷியவர்ணா, துப்புரவு ஆய்வாளர்கள் திரு. கோவிந்தராஜ், திரு. சுசீந்திரன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)