பாப்பிரெட்டிப்பட்டி, ஜன. 01:
தருமபுரி மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில், திமுக சார்பில் பேரூர் நிர்வாகிகள், BLA2, BLC மற்றும் BDA நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் நடைபெற்றது. இந்தக் கூட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பேரூர் செயலாளர் ஜெயச்சந்திரன் ஏற்பாட்டில், தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் P.பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் P.பழனியப்பன், வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் அதிக வாக்குகளை பெற்று, மாண்புமிகு திமுக தலைவர் அவர்களை மீண்டும் தமிழக முதலமைச்சராக உருவாக்க அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தி சிறப்புரையாற்றினார்.
இந்தக் கூட்டத்தின் மூலம் தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்து, தொகுதியில் திமுகவின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் செயல்திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

.jpg)