தீர்த்தமலை, டிச. 26:
தருமபுரி மாவட்டம், அரூர் கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட தீர்த்தமலை சக்தி கேந்திரம் சார்பில், முன்னாள் பிரதமரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான அவர்களின் 100-வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சி, தீர்த்தமலை சக்தி கேந்திரம் கிளை தலைவர்கள் ஹசினா மற்றும் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்தநாளை முன்னிட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில், 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில சிறப்பு செயற்குழு உறுப்பினர் G. இராசேந்திரன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாவட்ட தலைவர் C. குமார், தொழில் பிரிவு மாவட்ட துணை தலைவர் A.G. முருகன், ஒன்றிய துணை தலைவர் G. முருகன், ஒன்றிய மகளிர் அணி தலைவி மு. சித்ரா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு, அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் தேசிய சேவைகள், நல்லிணக்கம், வளர்ச்சித் தூரநோக்கு ஆகியவற்றை நினைவுகூர்ந்து உரையாற்றினர்.
மேலும், வாஜ்பாய் அவர்கள் நாட்டின் வளர்ச்சிக்காக மேற்கொண்ட கொள்கைகள் இன்றைய தலைமுறைக்கும் வழிகாட்டியாக உள்ளன என்றும், அவரது நூற்றாண்டு பிறந்த நாள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக பொறுப்புடன் கொண்டாடப்படுவது மிகுந்த அர்த்தமுள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு, மரக்கன்றுகளை நட்டு, வாஜ்பாய் நினைவினை மரியாதையுடன் போற்றினர்.

