தருமபுரி, டிச. 25:
தருமபுரி கோட்டத்திற்கு உட்பட்ட தருமபுரி 110/33–11 கிலோவோல்ட் துணைமின் நிலையம் மற்றும் சோலைக்கொட்டாய் 33/11 கிலோவோல்ட் துணைமின் நிலையங்களில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், 26.12.2025 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்வாரியம் (TANGEDCO) அறிவித்துள்ளது.
இந்த பராமரிப்பு பணியின் காரணமாக, மேற்கண்ட துணைமின் நிலையங்களின் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வரும் கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நலன் கருதி நடைபெறும் இந்த பராமரிப்பு பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும், பணிகள் நிறைவடைந்ததும் வழக்கம்போல் மின்விநியோகம் வழங்கப்படும் என்றும் தருமபுரி கோட்ட செயற்பொறியாளர் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) தெரிவித்துள்ளார்.

.jpg)