தருமபுரி, ஜன. 02:
தருமபுரி கிழக்கு நகர திமுக சார்பில், 27-வது வார்டிற்குட்பட்ட 156 மற்றும் 157 வாக்குச்சாவடிகளில் “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” என்ற தலைப்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம், தருமபுரி கிழக்கு நகர செயலாளர் நாட்டான் மாது தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், தமிழக அரசின் கடந்த நான்கரை ஆண்டு கால சாதனைகள் குறித்து நிர்வாகிகள் விரிவாக எடுத்துரைத்தனர். குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகை, மகளிர் விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், இல்லம் தேடி மருத்துவம், அரசு பள்ளி காலை உணவுத் திட்டம் ஆகிய திட்டங்கள் பொதுமக்களின் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் குறித்து விளக்கி பேசப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நிர்வாகிகள் வீடு, வீடாகச் சென்று தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், நகர துணைச் செயலாளர் வ. முல்லைவேந்தன், தலைமை பேச்சாளர் டி.ஏ. ரவி, மாவட்ட கலை இலக்கிய அணி தலைவர் டி.ஏ. குமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ரஹீம், நகர மன்ற உறுப்பினர்கள் சுருளிராஜன், அ. மாதேஸ்வரன், ஜெகன், பெருமாள் பொறுப்பு குழு உறுப்பினர் மாதேஷ், வெல்டிங் ராஜா, ஹரி விக்னேஷ், ரஜினி ரவி, அன்பழகன், சந்திரமோகன், வக்கீல் செல்வராஜ், டாக்டர் ஜெகன், வீரமணி, காஞ்சனா, அம்சவேணி, கௌரி, அரசி, மோகன், காசிநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தின் மூலம், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் திமுகவின் வெற்றியை உறுதி செய்வதற்கான களப்பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டன.

.jpg)