தருமபுரி - ஜனவரி 01:
தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை ஸ்ரீ வீரகாரன் திருக்கோவிலின் 27 - ம் ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஸ்ரீ வீரகாரன் திருக்கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ வீரகாரன், ஸ்ரீ நாகாத்தம்மன், ஸ்ரீ காளியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு காலை ஆறு மணி அளவில் அபிஷேகங்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அதிமுக மாவட்ட செயலாளர் கே. பி . அன்பழகன் விழாவினை கொடியேற்றி தொடங்கி வைத்தார்.
மேலும் கோவில் சார்பாக ஐந்தாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியினை மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ் .ஆர். வெற்றிவேல், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பி. வெங்கடேஸ்வரன், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் டி. கே. ராஜேந்திரன், டி .என். சி. மணிவண்ணன், டி. என். சி. இளங்கோவன், தடங்கம் சுப்பிரமணி, அதிமுக நகர செயலாளர் பூக்கடை ரவி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு அன்னதான நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தி சாமியே தரிசனம் செய்தனர்.

.jpg)