காரிமங்கலம், ஜன.25:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தை தொடர்ந்து மற்றும் முழுமையாக அமல்படுத்த வலியுறுத்தி, தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டாரத்தில் திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டாரத்திற்குட்பட்ட பைசுஅள்ளி கிராம ஊராட்சியில் உள்ள குக்கிராமங்களான பைசுஅள்ளி, பள்ளத்தில் கொட்டாய், மாட்டலாம்பட்டி, சின்னமாட்டலாம்பட்டி, மேலும் சட்டக் கல்லூரி அருகில் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர் விடுதி அருகில் ஆகிய பகுதிகளில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
இந்த பிரச்சாரத்தின் மூலம், ஊரக மக்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்யும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தின் முக்கியத்துவம், 100 நாள் வேலை வழங்கல், உரிய காலத்தில் கூலி வழங்கல் மற்றும் வேலை கேட்ட அனைவருக்கும் உடனடியாக வேலை வழங்கப்பட வேண்டிய அவசியம் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.
இந்த பிரச்சாரத்திற்கு கிராம மக்கள் ஆதரவு தெரிவித்ததுடன், வேலை உறுதியளிப்பு திட்டம் முறையாக செயல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர்.
.gif)

.jpg)