தருமபுரி, ஜன.25:
தருமபுரி கிழக்கு மாவட்டம், நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட A. ஜெட்டிஅள்ளி ஊராட்சி – தேங்காமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன், தவெக (தமிழக வெற்றிக் கழகம்) கட்சியின் ஒன்றிய பொருளாளராக இருந்து வந்த நிலையில், அக்கட்சியிலிருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இந்த இணைவு நிகழ்வு, தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளரும், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. மணி அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. கட்சியின் கொள்கைகள் மற்றும் திராவிட மாடல் அரசின் சாதனைகள் மீது ஏற்பட்ட நம்பிக்கையின் காரணமாக திமுகவில் இணைந்ததாக முருகன் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் ஏ. எஸ். சண்முகம், தருமபுரி நகர கழக பொறுப்பாளர்கள் நாட்டான் மாது மற்றும் M.P. கௌதம், பொதுக்குழு உறுப்பினர் P.C. துரைசாமி, தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் ரகு, ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் தமிழ் நீதி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு புதிய உறுப்பினரை வரவேற்றனர்.
இந்த இணைவு, நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியத்தில் திமுகவின் அமைப்புச் சக்தியை மேலும் வலுப்படுத்தும் என கழக நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
.gif)

.jpg)