தருமபுரி, ஜன.25:
புது டெல்லியில் கடந்த 24.01.2026 (சனிக்கிழமை) நடைபெற்ற தேசிய வில்வித்தை மற்றும் குறுக்கு வில் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 46 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த Shaolin Archery Academyயில் பயிற்சி பெற்ற மாணவர்கள் சிறப்பாக விளையாடி பல்வேறு பதக்கங்களை வென்று மாநிலத்திற்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தனர்.
இந்த தேசிய அளவிலான போட்டிகளில்,
-
M. தேவ பிரசன்னா – தங்கப் பதக்கம்
-
M. அஜய் – தங்கப் பதக்கம்
-
D. இளம் கவியரசன் – வெள்ளிப் பதக்கம்
-
K. ஹரிதாஸ் – வெண்கலப் பதக்கம்
-
V. மேகந்தாஸ் – வெண்கலப் பதக்கம்
-
S. விகடகவி – வெண்கலப் பதக்கம்என மொத்தம் ஆறு மாணவர்கள் பதக்கங்களை கைப்பற்றி சாதனை படைத்தனர்.
இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக, ஷாவுலின் அகாடமியின் வில்வித்தை பயிற்சியாளர்கள் சத்திய உதய மூர்த்தி மற்றும் வெங்கடேசன் கோவிந்தன் ஆகியோரின் பயிற்சி குறிப்பிடத்தக்கதாகும். இவ்விரு பயிற்சியாளர்களும் இந்திய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி உலக அளவில் ஏசியன் கோப்பை பாரம்பரிய வில்வித்தை போட்டியில் கசகஸ்தானில் பங்கேற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை கிராண்ட் மாஸ்டர் V. சீனிவாசன், பயிற்சியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் நேரில் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர். தேசிய அளவிலான இந்த சாதனை, தருமபுரி மாவட்டத்தில் விளையாட்டு துறைக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக விளையாட்டு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
.gif)

.jpg)