தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் இயக்கங்களின் நடவடிக்கை குழு சார்பில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மாது தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில்,
-
சி.பி.எஸ். (CPS) திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்,
-
பழைய ஓய்வூதிய திட்டத்தை (OPS) அமல்படுத்த வேண்டும்,
-
3.50 லட்சம் காலிப்பணியிடங்களை உடனடியாக காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும்,
-
கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு விதிக்கப்பட்டுள்ள மறைமுக தடைகளை நீக்க வேண்டும்,
உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, 2021 சட்டமன்றத் தேர்தல் காலத்தில் திமுக அரசு அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரி, மாநில செயலாளர்கள் பரிதா, ஜெயந்தி, மாநில துணைத் தலைவர்கள் லட்சுமணன், விஜயகுமார், சி.பி.எஸ். ஒழிப்பு இயக்க மாநில நிர்வாகிகள் அசோகர், தமிழ்செல்வி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

.jpg)