தருமபுரி, ஜன.25:
தருமபுரி மேற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) சார்பில், மொழிப்போரில் உயிர்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இன்று (26.01.2026) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் S P Surjith ஏற்பாட்டில், தருமபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளர் P. பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மொழிப்போரில் உயிர்நீத்த தியாகிகளின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு, மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த அஞ்சலி நிகழ்வில், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் சத்தியமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் சித்தார்த்தன், ஒன்றிய செயலாளர்கள் சரவணன், முத்துக்குமார், நகர செயலாளர் ஜெயச்சந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் இராசு, தமிழ்செல்வன், பேரூராட்சி தலைவர் மாரி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், மாணவர் அணியினர் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.
200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், மொழிப்போரில் தமிழுக்காக தியாகம் செய்த வீரர்களின் நினைவுகளைப் போற்றியும், தமிழ்மொழியின் உரிமைகளை பாதுகாப்பதற்கான உறுதியை வெளிப்படுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
.gif)

.jpg)