காரிமங்கலம், ஜன. 20:
தருமபுரி மேற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) செயற்குழு கூட்டம் காரிமங்கலத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்ட அவைத் தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பழனியப்பன் கலந்து கொண்டு, கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து விரிவாக விளக்கி உரையாற்றினார். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும், வரும் மார்ச் மாதம் 1-ஆம் தேதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் பிறந்த நாளை கட்சி சார்பில் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இந்த செயற்குழு கூட்டத்தில் மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் சத்யமூர்த்தி, மாநில விவசாய பிரிவு துணைச் செயலாளர் சுப்பிரமணி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பி.சி.ஆர். மனோகரன், சித்தார்த்தன், மாவட்ட பொருளாளர் முருகன், மாநில ஆதிதிராவிட நலக்குழு துணைச் செயலாளர் ரமேஷ், மாவட்ட துணைச் செயலாளர் ராஜகுமாரி, பொதுக்குழு உறுப்பினர்கள் மோகன், லட்சுமணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிவகுரு, பேரூராட்சி தலைவர்கள் முரளி, வெங்கடேசன், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர், தேர்தல் பணி குழு ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.

.jpg)