கரிமங்கலம், ஜன. 10:
தருமபுரி மாவட்டம், கரிமங்கலம் வட்டம், பேகரஹள்ளி ஊராட்சிக்குட்பட்ட பேகரஹள்ளி ஏரியில் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் R. Satish, இ.ஆ.ப., அவர்கள் இன்று (10.01.2026) தொடங்கி வைத்தார்.
இப்பணிகள் ஹிந்துஜா – அசோக் லேலண்ட் குழுமத்தின் (CSR) சமூக பொறுப்பு நிதியின் கீழ், தன்னார்வ நிதியுதவியாக மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் ரூ.24.80 லட்சம் மதிப்பீட்டில், 5 சிறு பாசன ஏரிகளில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பணிகளை பிரதான் (Pradhan) நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
ஏரி தூர்வாரும் பணிகள் மூலம் நீர்த்தேக்க கொள்ளளவு அதிகரித்து, நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், விவசாயத்திற்கும் கிராமப்புற மக்களுக்கும் பெரும் பயன் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு. விமல் ரவிகுமார், உதவி இயக்குநர் (தணிக்கை) திரு. வேடியப்பன், பிரதான் நிறுவன பிரதிநிதிகள் திரு. ஆதிநாராயணன், செல்வி. வித்யா, செல்வி. கல்பனா, செல்வி. ராகவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
CSR திட்டங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் இத்தகைய நீர்வள மேம்பாட்டு பணிகள், தருமபுரி மாவட்டத்தின் நீராதார பாதுகாப்பிற்கும், நிலையான வளர்ச்சிக்கும் முக்கிய பங்கு வகிக்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

