தருமபுரி, பிப்.24:
தருமபுரி மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) சார்பில் மாவட்ட கட்சி அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் J. ஜெயலலிதா அவர்களின் 78வது பிறந்தநாள் விழா மாவட்ட செயலாளர் கே.பி.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜெயலலிதா அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், நகர கழக செயலாளர் பூக்கடை ரவி, மாநில மருத்துவரணி இணைச் செயலாளர் அசோகன், பழனிச்சாமி, பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர் சரவணன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)