Type Here to Get Search Results !

தருமபுரியில் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.


தருமபுரி, பிப். 28:
 


தருமபுரி மாவட்டம் ஒட்டப்பட்டி அடுத்த செட்டியூரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் மாவட்ட அளவிலான மாபெரும் சிலம்பப் போட்டிகள் நடைபெற்றன. பாரம்பரிய சிலம்பம் மற்றும் ஸ்கில் அகாடமி இணைந்து நடத்திய இப்போட்டிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் பல்வேறு சிலம்பக் கலைத் திறன்களை வெளிப்படுத்தி பார்வையாளர்களை கவர்ந்தனர்.


போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கோப்பைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் நியூ ஹரிஜான், பள்ளி தாளாளர் சிலம்பரசன், மை பாரத் அலுவலர் பிரவீன் டார்லஸ், பாரம்பரிய சிலம்பம் பயிற்சியாளர் பாவல்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பாரம்பரிய தமிழர் தற்காப்புக் கலையான சிலம்பத்தை இளம் தலைமுறையினரிடம் ஊக்குவிக்கும் நோக்கில் இப்போட்டி நடத்தப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies