Type Here to Get Search Results !

TUPF சார்பில், அமைப்புசார நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.


தருமபுரி, பிப்.23:
 


தருமபுரியில் Trade Union Protection Federation (TUPF) சார்பில், அமைப்புசார நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படாததை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கூட்டமைப்பு மாநில செயலாளர் வி.எம்.மாது தலைமையில் நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்தில், அமைப்புசார தொழிலாளர்களுக்கான தனித்துறை உருவாக்க வேண்டும், நல வாரியத்தில் நிலையான செயல்முறை (SOP) உடனடியாக அமல்படுத்த வேண்டும், நல வாரியத்தில் பதிவு செய்ய VAO பணிச்சான்று வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும், தொழிற்சங்கங்களுக்கு தனி அடையாள அட்டை (ID) வழங்க வேண்டும், நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பு மாநில பொருளாளர் கிஷோர், மாநில இணை செயலாளர் அசோகன், மாவட்ட தலைவர் பெரியசாமி, மாவட்ட பொருளாளர் மாது, மாவட்ட செயலாளர் சம்பத்குமார், மாவட்ட துணை செயலாளர் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அமைப்புசார தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies