பாலக்கோடு, பிப்.23:
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் நடைபெற உள்ள ஸ்ரீபுதூர் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வைக்கப்பட்ட பேனர் அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலக்கோட்டில் நேற்று முதல் வரும் வெள்ளிக்கிழமை வரை ஸ்ரீபுதூர் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நகர் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பக்தர்களை வரவேற்கும் வகையில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று, பாலக்கோடு கடைத்தெருவில் முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் சார்பில் பக்தர்களை வரவேற்று பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த பேனர் நேற்றிரவு சிலரால் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தை அறிந்த முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கத்தினர், Palacode Police Station-ல் புகார் மனு அளித்துள்ளனர். மேலும், பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளியையும் சந்தித்து, அகற்றப்பட்ட பேனரை மீண்டும் அதே இடத்தில் வைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
முன்னாள் ராணுவ வீரர்கள் சார்பில் கோயில் திருவிழாவிற்கு வரும் பக்தர்களை வரவேற்க வைக்கப்பட்ட பேனர் அகற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.gif)

.jpg)