காரிமங்கலம், ஜன. 05:
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஜக்கசமுத்திரம் ஊராட்சியில், சென்னகேசவப் பெருமாள் கோவில் அருகே புதிதாக அமைக்கப்பட்ட பகுதி நேர நியாயவிலைக் கடை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி கலந்து கொண்டு, புதிய நியாயவிலைக் கடையை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு விலையில்லா அத்தியாவசியப் பொருட்களை வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்தார்.
இந்த நிகழ்வுக்கு திமுகவின் காரிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் எம்.வி.டி. கோபால் தலைமை வகித்தார். மாநில விவசாய அணி துணை செயலாளர் சூடப்பட்டி டி. சுப்பிரமணி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பாம்பே சக்தி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஏ.வி. குமார், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் ஜே.எம்.எஸ். சக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய நெசவாளர் அணி அமைப்பாளர் தங்கதுரை அனைவரையும் வரவேற்றார்.
மேலும், ஏ.சி.1 வினோத்குமார், கிளை செயலாளர்கள் நெஞ்சுண்டன், செந்தில்குமார், முன்னாள் பால்வள கூட்டுறவு தலைவர் செந்தில், பி.எல்.ஏ.2 கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனுடன் கூட்டுறவுத்துறை அலுவலர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
புதிய பகுதி நேர நியாயவிலைக் கடை தொடங்கப்பட்டதன் மூலம், ஜக்கசமுத்திரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை எளிதாகவும் சீராகவும் பெற்றுக் கொள்ளும் வசதி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

.jpg)