தருமபுரி, ஜன.05:
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் கஞ்சா, லாட்டரி சீட்டு மற்றும் சட்டவிரோத சந்து கடைகள் அதிக அளவில் செயல்பட்டு வருவதாகக் கூறி, அவற்றை உடனடியாக தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, பாரதிய ஜனதா கட்சி நலத்திட்ட பிரிவு துணைத் தலைவர் சிவா, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இன்று (ஜனவரி 06) மனு அளித்தார்.
அந்த மனுவில், பாலக்கோடு நகரப்பகுதியில் உள்ள 18 வார்டுகளிலும், குறிப்பாக பாலக்கோடு காவல் நிலையத்தின் பின்புறம் கஞ்சா, லாட்டரி சீட்டு மற்றும் சந்து கடைகள் சட்டவிரோதமாக அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தளவாயள்ளி, புதூர், தக்காளி மார்க்கெட், மல்லாபுரம், மாரண்டஅள்ளி, காட்டு செட்டிப்பட்டி, ஜிட்டான் டெல்லி, காரிமங்கலம், அனுமந்தபுரம், வெள்ளிச்சந்தை, கொளச்சநல்லி, எண்டபட்டி, ஆராதஹள்ளி, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளிலும் இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகள் நடைபெறுவதால் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பாதிக்கப்படுவதாக மனுவில் தெரிவித்துள்ளார்.
இதனால், சமூக சீர்கேடுகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகக் கூறிய சிவா, மேற்கண்ட சட்டவிரோத செயல்பாடுகளை கட்டுப்படுத்த காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்த மனு அளிக்கும் நிகழ்வின்போது, பாரதிய ஜனதா கட்சியின் நகரப் பொருளாளர் முனியப்பன், பாலக்கோடு ஒன்றிய விவசாய அணி தலைவர் பச்சையப்பன், அழகு பெருமாள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

.jpg)