இதன் ஒரு பகுதியாக ஒகேனக்கல் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய பொறுப்பு அலுவலர் முனுசாமி தலைமையிலான தீயணைப்புத் துறையினர், ஊட்டமலை, ஒகேனக்கல், நல்லாம்பட்டி மற்றும் மஞ்சாரப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு தீயைப் பற்றிய விழிப்புணர்வு வகுப்புகளை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு தீ விபத்து ஏற்படும் காரணங்கள், தீ விபத்து நேரத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாணவர்களின் புரிதலை மதிப்பீடு செய்ய 20 கேள்விகள் கொண்ட கேள்வித்தாள் வழங்கப்பட்டு, அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தீ பாதுகாப்பு விழிப்புணர்வு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை பணியாளர்கள் முனுசாமி, அசோக் குமார் உள்ளிட்டோர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
#தகடூர்குரல் #ThagadurKural #தருமபுரி #Dharmapuri #Pennagaram #FireSafety #FireRescue #SchoolAwareness #TamilNews #LocalNews
.gif)

.jpg)