தருமபுரி மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை ஆணையர், சென்னை அவர்களின் அறிவுரைகளின்படி, மாவட்டத்தில் உள்ள 249 கிராம ஊராட்சிகளில் குடியரசு தினத்தை முன்னிட்டு 26.01.2026 (திங்கள் கிழமை) அன்று காலை 11.00 மணி முதல் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன.
மேற்படி நாளில் கிராம சபை கூட்டங்களை சிறப்பாக நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலாளர்கள் மேற்கொள்ள உள்ளனர். கிராம சபை கூட்டங்களை நடத்த உதவியாக ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு பற்றாளர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், கூட்டங்கள் நடைபெறுவதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் உதவி இயக்குநர் மற்றும் இணை இயக்குநர் நிலையிலான ஒருங்கிணைப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, இக்கிராம சபை கூட்டங்களில் அனைத்து துறை அலுவலர்கள், ஊராட்சியிலுள்ள வாக்காளர்கள், பொதுமக்கள், மகளிர் சுயஉதவி குழுவினர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் தவறாமல், அதிக அளவில் கலந்து கொண்டு தங்களது கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
26.01.2026 அன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்படும் பொருட்கள்:
-
கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல்
-
கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை
-
கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்
-
மக்கள் திட்டமிடல் இயக்கம் (People’s Plan Campaign) மூலம் 2026–27 ஆம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சி திட்டத்திற்கு ஒப்புதல் குறித்து விவாதித்தல்
-
தொழிலாளர் வரவு–சலவு திட்டம் குறித்து விவாதித்தல்
-
தொழிலாளர் வரவு–சலவு திட்ட பணிகள் குறித்து விவாதித்தல்
-
நலிவு நிலை குறைப்பு நிதி குறித்து விவாதித்தல்
-
தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டம் குறித்து விவாதித்தல்
-
ஜல் ஜீவன் திட்டம் குறித்து விவாதித்தல்
-
சிறு பாசன ஏரிகள் புதுப்பித்தல் குறித்த விவரங்கள் குறித்து விவாதித்தல்
-
தொகுதி மேம்பாட்டு திட்டம் குறித்து விவாதித்தல்
-
இதர பொருட்கள்
மேற்கண்ட பொருண்மைகள் குறித்து கிராம சபை கூட்டங்களில் விவாதிக்கப்பட உள்ளதாக ரெ. சதீஸ், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

.jpg)