Type Here to Get Search Results !

பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் தேசிய பார்வை இழப்பு தடுப்பு திட்டத்தின் கீழ் புதிய கண் அறுவை சிகிச்சை மையம் திறந்து வைக்கப்பட்டது.


பென்னாகரம், மார்ச். 06:


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் தேசிய பார்வை இழப்பு தடுப்பு திட்டத்தின் கீழ் புதிய கண் அறுவை சிகிச்சை மையம் திறந்து வைக்கப்பட்டது. பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை பொதுமக்களுக்கு சிறந்த மருத்துவ சேவைகளை வழங்கும் வகையில் பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தேசிய பார்வை இழப்பு தடுப்பு திட்டத்தின் கீழ் கண் அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் கண் அறுவை சிகிச்சைக்கான நவீன இயந்திரங்கள் மற்றும் கண் பரிசோதனை கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. புதிய கண் அறுவை சிகிச்சை மையத்தை மாவட்ட மருத்துவம் மற்றும் நலப்பணிகள் இணை இயக்குநர் சாந்தி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து புதிதாக திறக்கப்பட்ட கண் அறுவை சிகிச்சை மையத்தில் ஒருவருக்கு கண் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, அவர்களுக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது. மேலும் கண் சொட்டு மருந்து பயன்படுத்தும் முறை மற்றும் அறுவை சிகிச்சைக்கு பிறகு வீட்டில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் தலைமை மருத்துவர் கனிமொழி, மருத்துவர்கள் வெண்ணிலாதேவி, கலாவதி, அருண் பிரசாத், ஜே. கனிமொழி, உதயகுமார் உள்ளிட்டோர், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


#தகடூர்குரல் #ThagadurKural #தருமபுரி #Dharmapuri #Pennagaram #GovernmentHospital #EyeSurgery #NationalBlindnessControl #HealthNews #TamilNews 


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

📲 சமீபத்திய செய்திகள் உடனுக்குடன் அறிய எங்களை பின்தொடருங்கள்


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies