சின்னஏரி பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் இல்லாததால் மக்கள் நீண்ட காலமாக சிரமம் அடைந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி, இன்று குடிநீர், தெருவிளக்கு மற்றும் சாலை வசதி செய்து தரக் கோரி மூன்றாவது வார்டு வன்னியர் தெருவைச் சேர்ந்த கிராம மக்கள் பாப்பாரப்பட்டி–பாலக்கோடு சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தொண்டர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாப்பாரப்பட்டி காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் முறையான குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியல் காரணமாக பாப்பாரப்பட்டி–பாலக்கோடு சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
#தகடூர்குரல் #ThagadurKural #தருமபுரி #Dharmapuri #பாப்பாரப்பட்டி #Papparapatti #RoadProtest #PublicIssue #TamilNews #LocalNews
.gif)

.jpg)