இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் “வைரஸ் பற்றிய நுண்ணறிவு மற்றும் சவால்கள்” என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர் முகமதுரியாஸ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவியல் தொடர்பான சிறப்புரை வழங்கினார்.
மேலும் மாணவ, மாணவியர்களுக்காக அறிவியல் சார்ந்த ரங்கோலி (கோல) போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் தயாரித்திருந்த அறிவியல் கண்டுபிடிப்பு மாதிரிகள் மற்றும் திட்டங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன.
நிகழ்ச்சியில் வணிக நிர்வாகத் துறை தலைவர் முனைவர் அன்பரசன், பள்ளி முதல்வர்கள் ரோஸ்லின் மற்றும் டயானா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி நிறைவில் முனைவர் செல்வன் நன்றி தெரிவித்தார்.
#தகடூர்குரல் #ThagadurKural #தருமபுரி #Dharmapuri #Palacode #NationalScienceDay #ScienceSeminar #CollegeNews #TamilNews #LocalNews
.gif)

.jpg)