இன்று அதிகாலை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கோமாதா பூஜை, ஸ்ரீ கணபதி ஹோமம், கலச ஆராதனை, நவகிரக ஹோமம், பஞ்சசூக்த ஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மகா சாந்தி ஹோமம் மற்றும் வேத பாராயணம் முழங்க பூர்ணாஹூதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து யாகசாலையிலிருந்து புனித கலச தீர்த்தக் குடங்களை கோயில் முக்கியஸ்தர்கள் தலையில் சுமந்து கொண்டு வந்து கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
கலசத்திற்கு ஊற்றிய புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீ சின்ன மாரியம்மன் சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு, பூக்களால் அலங்கரித்து மகா தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ சின்ன மாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை குப்பன் கொட்டாய் ஊர் கவுண்டர்கள், பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
#தகடூர்குரல் #ThagadurKural #தருமபுரி #Dharmapuri #Palacode #TempleFestival #Kumbabishekam #MariammanTemple #TamilCulture #TamilNews
.gif)

.jpg)
.jpg)