Type Here to Get Search Results !

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது, நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் மணி பங்கேற்பு.


தருமபுரி, ஜன. 03:

தருமபுரி கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) சார்பில் நிர்வாகிகள் செயற்குழு கூட்டம், தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திராவிட சமத்துவ பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடுவது, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த சீராய்வு பணிகளை துரிதப்படுத்துவது உள்ளிட்ட கட்சியின் முக்கிய ஆக்கப் பணிகள் குறித்து, தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. மணி நிர்வாகிகளுக்கு விரிவான ஆலோசனைகளை வழங்கி பேசினார். கட்சி பணிகளில் ஒருங்கிணைப்பு மற்றும் களப்பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.


இக்கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் தடங்கம் பெ. சுப்ரமணி, தருமபுரி சட்டமன்ற தொகுதி பார்வையாளர் டி. செங்குட்டுவன், நகர செயலாளர்கள் நாட்டான் மாது, எம்.பி. கௌதம், மாநில நிர்வாகி இரா. தாமரைச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் ஏ.எஸ். சண்முகம், காவேரி, என்.பி. பெரியண்ணன், என். செல்வராஜ், பச்சியப்பன், வைகுந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மேலும், இளைஞர் அணி சார்பில் எம்.ஜி.எஸ். வெங்கடேஸ்வரன், அசோக்குமார் கோவிந்தன், முரளி, மகளிர் அணி சார்பில் கவிதா மோகன்தாஸ், ஐ.டி. விங் நிர்வாகிகள் உதயசூரியன், ரகு, முருகவேல், மாவட்ட கலை இலக்கிய அணி தலைவர் டி.ஏ. குமார், அ. மாதேஸ்வரன் உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் மற்றும் நகர நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள், தேர்தல் பணிக்குழு தலைவர்கள் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies