Type Here to Get Search Results !

ஆருத்ரா திருநாளை முன்னிட்டு தருமபுரி மாவட்ட சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.


தருமபுரி, ஜன. 03:

ஆருத்ரா திருநாளை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக, தருமபுரி கடைவீதியில் அமைந்துள்ள ஸ்ரீ மருதவாணேஸ்வரர் திருக்கோவில் (ஸ்ரீ அம்பிகா பரமேஸ்வரி உடனாகிய) ஆலயத்தில் அதிகாலை முதலே சிறப்பு அபிஷேகம், பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் விமரிசையாக நடைபெற்றது.


இந்த சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து, திருக்கோவில் சார்பில் அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பின்னர், சுவாமியின் திருவீதி உலா கோலாகலமாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு ஆன்மிக உற்சாகத்துடன் தரிசனம் செய்தனர். ஆருத்ரா திருநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாடுகள், தருமபுரி நகரில் ஆன்மிக எழுச்சியை ஏற்படுத்தியதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies