Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்ட அனைத்து நாயுடுகள் மகாஜன நல சங்க சிறப்புக் கூட்டம் நடைபெற்றது, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்.


தருமபுரி, ஜூலை 6:


தருமபுரி மாவட்ட அனைத்து நாயுடுகள் மகாஜன நல சங்கத்தின் சிறப்புக் கூட்டம், கடந்த ஜூலை 5-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணியளவில் தருமபுரியில் உள்ள மகாலட்சுமி சில்க்ஸ் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் கே.ஆர். நந்தகுமார் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் டி.சி. வெங்கடேசன் (சித்ரா மெடிக்கல்ஸ்) முன்னிலை வகித்தார்.


மாவட்ட கௌரவத் தலைவர், ஓய்வு பெற்ற நீதிபதி மற்றும் பாஸ்போ கல்வி நிறுவனங்களின் தலைவர் பாண்டுரங்கன் சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அதிகாரி கோவிந்தராஜ் (ஓசூர்) கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். மேலும், சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ராஜா (பொன்னி ஹோட்டல்) மற்றும் சிறப்புத் தலைவர், கலைமகள் கல்வி நிறுவனங்களின் தலைவர் நடராஜன் ஆகியோர் சங்கத்தின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினர்.


இந்தக் கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு, சங்க வளர்ச்சி மற்றும் சமூக நலன் தொடர்பான கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில், வரும் ஜூலை 10-ஆம் தேதி தருமபுரி மாவட்ட திருமண தகவல் அலுவலகத்தை திறந்து வைப்பது, ஆகஸ்ட் மாத இறுதியில் "கல்யாண மாலை" நிகழ்ச்சியை நடத்துவது, மற்றும் தாலுகா வாரியாக புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் முக்கியமானவையாகும். கூட்டத்தின் நிறைவில், வழக்கறிஞர் குப்புசாமி நன்றி உரையாற்றினார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies