Type Here to Get Search Results !

அதிமுக மீண்டும் ஆட்சியமைக்க வேண்டி; சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நடைபயணம் மேற்கொள்ளும் அதிமுக தொண்டர்.


காரிமங்கலம், ஜன.05:


அ.இ.அ.தி.மு.க. மீண்டும் தமிழகத்தில் ஆட்சியமைக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன், அக்கட்சியின் தொண்டர் ஒருவர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆன்மிக நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார். அ.இ.அ.தி.மு.க. கழக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தலைமையில், 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நடைபயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி, காரிமங்கலம் பேரூராட்சி 15-வது வார்டு, சின்னமிட்டஅள்ளி பகுதியைச் சேர்ந்த அதிமுக கிளை கழக செயலாளர் திரு. சி. சரவணன், 01.01.2026 அன்று சபரிமலை ஐயப்பன் கோவில் நோக்கி நடைபயணத்தை தொடங்கினார். இந்த நடைபயணம் வெற்றிகரமாக நிறைவேறவும், அவரது வேண்டுதல் நிறைவேறவும் முன்னாள் அமைச்சரும் அதிமுக மாவட்ட செயலாளருமான KP. அன்பழகன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் அவரை வாழ்த்தி வழியனுப்பி வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்த ஆன்மிக நடைபயணம், கட்சி தொண்டர்களிடையே உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies