தமிழ்நாடு அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, அரசாணை (நிலை) எண்.954, நாள் 12.12.2025-ன் படி, தருமபுரி மாவட்டத்தில் நிர்வாக வசதிக்காக வட்ட எல்லைகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பாப்பிரெட்டிப்பட்டி குறுவட்டத்தில் உள்ள சித்தேரி மற்றும் எஸ். அம்மாபாளையம் கிராமங்களும், தென்கரைக்கோட்டை குறுவட்டத்தில் உள்ள சின்னாங்குப்பம், கோபிசெட்டிபாளையம், கொளகம்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டுள்ளன.
மேற்கண்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், சான்றுகள் வழங்கல், பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, உரிமைத்தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட வருவாய்த் துறை சார்ந்த அனைத்து சேவைகளுக்கும் இனி அரூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தை தொடர்புகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

.jpg)