பாப்பிரெட்டிப்பட்டி, டிச. 17:
தருமபுரி மேற்கு மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி (60) உட்பட்ட தருமபுரி வடக்கு ஒன்றியம், மூக்கனூர் ஊராட்சியில் உள்ள வாக்குச்சாவடி எண் 91, 92-ல் இன்று (17.12.2025) மாலை 3.00 மணியளவில் “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” பரப்புரை செயல் திட்டக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு திமுகவின் தருமபுரி வடக்கு ஒன்றிய செயலாளர் திரு. நா.அ. மாது தலைமை தாங்கினார். மாவட்ட இலக்கிய அணி தலைவர் சோலை பூ. முனியப்பன், மாவட்ட ஆதிதிராவிடர் குழு துணை அமைப்பாளர் எம்.கே. சரவணன், ஒன்றிய IT Wing அமைப்பாளர் எம். மேகராஜ், BLA2 த. சிலம்பரசன், பழனிசாமி, பங்காரு உள்ளிட்டோர் மற்றும் BLA2, BDA, BLC நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என்ற இலக்குடன், “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” என்ற குறிக்கோளை தீவிரமாக செயல்படுத்துவது, கழக அரசின் சாதனைகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களை வீடு வீடாக சென்று மக்களிடம் எடுத்துச் சொல்லி அதிக வாக்குகளை பெற்றுத் தருவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)