Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் தனியார் நிறுவன பேருந்துகளை முற்றுகையிட்ட உறவினர்கள் – விபத்தில் உயிரிழந்த தொழிலாளிக்கான நிவாரணம் கோரி போராட்டம்.


பாலக்கோடு – டிசம்பர் 11:

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் டாடா நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 40 தொழிலாளர்கள், நேற்று நள்ளிரவு வேலை முடித்து நிறுவன பேருந்தில் பாலக்கோடு நோக்கி பயணம் செய்தனர். பாலக்கோடு கர்த்தாரப்பட்டி சுங்கச்சாவடி சர்வீஸ் சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கேஸ் டேங்கர் லாரி அதனை மோதி பேருந்தின் பின்பகுதி சேதமடைந்தது.


இந்த விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும், தருமபுரி மாவட்டம் குட்டம்பட்டியை சேர்ந்த முத்துசாமி (32) என்பவர் துயரகரமாக உயிரிழந்தார். அவர் திருமணம் செய்து ஐந்து வருடங்களே ஆனது. அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.


இந்நிலையில், டாடா நிறுவனம் சார்பாக பணியாளர்களை ஏற்றி வந்த நான்கு தனியார் பேருந்துகளையும் கர்த்தாரப்பட்டி சுங்கச்சாவடி அருகே முத்துசாமியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் முற்றுகையிட்டு பிடித்துவைத்துள்ளனர்.


அவர்கள் வலியுறுத்தும் கோரிக்கைகள்:

  • உயிரிழந்த முத்துசாமியின் குடும்பத்துக்கு உரிய நிவாரணத் தொகை வழங்குதல்

  • மனைவிக்கு உடனடி வேலை வழங்குதல்

  • இரு குழந்தைகளின் கல்விச் செலவுகளை நிறுவனம் ஏற்றுக்கொள்ளுதல்


உறவினர்கள் கூறுகையில், நிறுவனம் உடனடி நிவாரண அறிவிப்பு வழங்காமல் அமைதியாக இருப்பதால் தாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கின்றனர். பாலக்கோடு போலீசார் மற்றும் நிர்வாகம் பேரத்து அருகில் தயார்நிலையில் உள்ளனர். பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறது.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies