தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அண்ணாநகரில் திமுக பேரூர் கழகம் சார்பில் “என் வாக்குச் சாவடி – வெற்றி வாக்குச் சாவடி” நிகழ்ச்சி பேரூர் கழக செயலாளர் மற்றும் பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் எம்.எம். முருகன், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அரியப்பன், நகர அவைத் தலைவர் அமானுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி உரையாற்றும்போது, பாலக்கோட்டில் உள்ள 18 வார்டுகளிலும் பேவர் பிளாக் சாலை, சாக்கடை கால்வாய் வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம், அறிவுசார் மையம், நவீன பேருந்து நிழற்கூடம் உள்ளிட்ட ரூ.37 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பெருமிதத்துடன் தெரிவித்தார்.
மேலும், பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்துவதற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உறுதுணையாக உள்ளார் எனவும் கூறினார். தமிழக அரசின் நலத்திட்டங்களை விரிவாக எடுத்துரைத்த அவர், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக மீண்டும் வெற்றி பெற்று மக்கள் நலத்திட்டங்களை தொடர்ச்சியாக நிறைவேற்றும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய துணை செயலாளர் பி.எல். ரவி, மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் மோகன், குமரன் ஒரணியில் தமிழ்நாடு தொகுதி ஒருங்கிணைப்பாளர் பரணி, பேரூராட்சி கவுன்சிலர்கள், கிளை செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)