தருமபுரி, டிச.17:
தருமபுரி கிழக்கு நகர திமுக சார்பில், வார்டு செயலாளர் கனகராஜ் ஏற்பாட்டில், ஒன்பதாவது வார்டு 121-வது வாக்குச்சாவடியில் “என் வாக்கு சாவடி – வெற்றி வாக்கு சாவடி” ஆலோசனைக் கூட்டம் கிழக்கு நகரப் பொறுப்பாளர் நாட்டான் மாது தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் திமுக அரசின் முக்கிய சாதனைகளான மகளிர் உரிமைத் தொகை, மகளிர் விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து, இத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் வீடு, வீடாகச் சென்று விழிப்புணர்வு நோட்டீசுகள் வழங்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நகர துணைச் செயலாளர் வ. முல்லைவேந்தன், தலைமை கழக பேச்சாளர் டி.ஏ.ரவி, மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ரஹீம், மாவட்ட கலை இலக்கிய அணி தலைவர் டி.ஏ.குமார், வார்டு உறுப்பினர்கள் ஏ. மாதேஸ்வரன், ஜெகன், சுருளிராஜன், பெருமாள், மாவட்ட ஓட்டுநரணி துணை அமைப்பாளர் முருகன், வார்டு பிரதிநிதி மங்கை, சேகர், வெங்கடேசன், நகர மாணவரணி துணை அமைப்பாளர் சுமன், நகர மீனவரணி துணை அமைப்பாளர் சரவணன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ஆர்.கலைவாணி, ராதா கிருஷ்ணன், சாந்த ரூபி (தருமபுரி மேற்கு நகர பொறுப்புக் குழு உறுப்பினர்), ராஜ்குமார், லோகேஷ் குமார் (வார்டு இளைஞர் அணி), செல்வராஜ், ஆறுமுகம் உள்ளிட்டோர் மற்றும் ஒன்பதாவது வார்டு நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662

.jpg)