Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்ட வாக்காளர் பெருமக்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் அன்பான வேண்டுகோள்.


தருமபுரி, டிச.14:

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்–2026 பணிகள் கடந்த 04.11.2025 முதல் நடைபெற்று வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 27.12.2025 அன்று பதிவு செய்யப்பட்டிருந்த மொத்தம் 12,85,432 வாக்காளர்களுக்கும் கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்து திரும்ப பெறப்பட்ட படிவங்கள் முழுமையாக சரிபார்க்கப்பட்டு, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் பதிவு செய்யப்பட்டு 100 சதவீத பணிகளும் நிறைவு பெற்றுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் திருத்தப்பட்ட கால அட்டவணைப்படி 16.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.


இதனைத் தொடர்ந்து, தற்போது 18 ஆண்டுகள் வயது நிறைவடைந்த நபர்கள் மற்றும் 01.10.2026 தேதிக்குள் 18 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நபர்கள், வாக்காளர் பட்டியலில் பதிவு செய்திட புதிய வாக்காளர் பதிவுக்கான படிவம்–6 மற்றும் உறுதிமொழி படிவத்தை உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்து, தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.


மேலும், இதுவரை கணக்கெடுப்பு படிவங்கள் வழங்காத நபர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ள நபர்களும், படிவம்–6 மற்றும் உறுதிமொழி படிவங்களை உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலக தேர்தல் பிரிவு, உதவி மையம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக உதவி மையங்களில் படிவங்கள் வைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் (BLO) படிவங்களை வைத்துள்ளனர். பொதுமக்கள் அவற்றை பெற்றும் பூர்த்தி செய்தும் வழங்கலாம்.


மேலும், இணைய வழியாக https://voters.eci.gov.in/ என்ற இணையதளத்தில் “New Voters Registration” என்ற பகுதி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். உதவி தேவையெனில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் 1950, வாட்ஸ்அப் தேர்தல் உதவி எண் 94441 23456 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம். அதேபோல், வாக்காளர் பதிவு அலுவலர்கள் அலுவலக எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

வாக்காளர் பட்டியல் – உதவி தொடர்பு எண்கள் (தருமபுரி மாவட்டம்)

  • மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை : 1950

  • வாட்ஸ்அப் – தேர்தல் உதவி எண் : 94441 23456

வட்டார வாரியாக வாக்காளர் பதிவு அலுவலர் தொடர்பு எண்கள் :

  • தருமபுரி வட்டம் : 04342 – 260927

  • பாலக்கோடு வட்டம் : 04348 – 222045

  • பென்னாகரம் வட்டம் : 04342 – 255636

  • பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் : 04346 – 246544

  • அரூர் வட்டம் : 04346 – 296565

இணைய வழி விண்ணப்பம் :
https://voters.eci.gov.in/New Voters Registration


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க / திருத்த / நீக்கம் செய்ய, பொதுமக்கள் மேற்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

வலுவான ஜனநாயக கட்டமைப்பை உருவாக்கவும், வாக்காளர் பட்டியலை செம்மையாக தயாரிக்கவும், வாக்களிப்பது நமது கடமை என்பதை உணர்ந்து, தகுதியுள்ள அனைவரும் வாக்காளராக பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியரும் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளனர்.


© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies